Thu. Apr 25th, 2024

Madhuban – Gyansharovar

மதுவனத்தின் ஞானசரோவர் வளாகத்தில் நடைபெற்ற இளைஞர்கள் மாநாடு பல்வேறு ஆக்கப்பூர்வமான படைப்புகளோடு  நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குவாலியர் ஐடிஎம் பல்கலைக் கழக பேராசிரியர் சச்சின் சர்மா அவர்கள் “தன்னை வென்றவரே உண்மையான பலசாலி” என்ற கருத்தில் தனது உரையை வழங்கினார்.

அப்போது மத்திய பிரதேச சாகர் நகர எம்.வி.என் பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் ராகேஷ் சோனி, பிரம்மா குமாரிகளின் வர்த்தக மற்றும் தொழில்துறைத் தலைவர் பிகே யோகினி, இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் பிகே சந்திரிகா மற்றும் பலர், இளைஞர்கள் தங்கள் வாழ்வை சிறந்ததாக்க வாழ்த்துக்களை வழங்கினார்கள்.

இந்த மாநாட்டிற்கு வந்திருந்த நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், சமூகத்தை போதைப் பொருட்களில் இருந்து விடுவிக்கவும், தூய்மையைப் பேணவும், மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், தடுமாறி நிற்கும் இளைய தலைமுறையினருக்கு சரியான திசையைக் காட்டவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது பல்வேறு நடவடிக்கைகளில் சிறந்து விளங்கிய இளைஞர்களுக்கு யூத் விங் சார்பாக பாராட்டுப் பத்திரங்கள் வழங்கப்பட்டு கொளரவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *