Thu. Apr 25th, 2024

மதுபன்

செப்டம்பர் 21 –ஆம் தேதி மதுபனில் நடைபெற்ற ஊடக மாநாட்டின் துவக்க விழாவில் இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஊடகத்துறையினர் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டார்கள்.

பிரம்மா குமாரிகளின் அமைப்பின் சாந்திவனத்தில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக மாநாட்டில் அமைப்பின் பொதுச்செயலாளர் இராஜயோகி பி.கே.நிர்வேயர் அவர்கள் உரையாற்றினார் அப்போது “தீவிரவாத நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும் உலகில் தங்களது எழுத்து மூலம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பரப்பி குளிரச்செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்க ஆன்மீகத்தோடு இணைந்து ஊடகத்துறை பங்காற்ற முடியும் என இந்தியன் பெடரேசன் ஆப் வொர்க்கிங் ஜெர்னலிஸ்டின் தலைவர் கே.விக்ரம் ராவ் கூறினார். மதுராவிலிருந்து வந்த சட்டமன்ற உறுப்பினர் பூர்ண பிரகாஷ் இந்த மாநாட்டை பார்த்தப்பிறகு சமூகத்தை தீயவைகளிலிருந்து விடுவிக்க ஊடகங்கள் உதவும் என்று எதிர்பார்க்கலாம் என கூறினார்.

ஊடகத்துறையினர் நேர்மையான அணுகுமுறைகளை கையாண்டு நல்ல காரியங்களுக்கு உதவவேண்டும் என்று ஊடகபிரிவின் தலைவர் சகோதரர் பி.கே.கருணா அவர்கள் உரையாற்றினார்.

போபால் நகர மூத்த பத்திரிக்கையாளர் பேராசிரியர் கமல்தீட்சித், மராட்டிய வன சேனல் நிர்வாக ஆசிரியர் திரு.சந்தீப் சவுகான், ஊடகத்துறை துணைத்தலைவர் சகோதரர் பி.கே.ஆத்மபிரகாஷ், விளையாட்டு பிரிவு துணைத்தலைவர் சகோதரி பி.கே.சசி, தேசிய ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சாந்தனு அகில இந்திய சிறு செய்திதாள் சங்கத்தலைவர்  சிவ் சங்கர் திரிபாதி, தலைமையக ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சாந்தனு முதலிய பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *