Fri. Mar 29th, 2024

Madubhan – shantivan

.  ”ஆன்மீகத்தின் மூலம் ஒற்றுமை, அமைதி மற்றும் வளமை” என்ற தலைப்பில் ஏறப்பாடு செய்யப்பட்ட உலகளாவிய உச்சிமாநாட்டில் உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கில் முக்கிய பிரமுகர்கள்  பங்கேற்றனர். சாந்திவன் வளாகத்தில் உள்ள டைமண்ட் ஹாலில் அனைவர் முன்னிலையில் பாரதநாட்டின் துணை ஜனாதிபதி மாண்புமிகு. வெங்கையாநாயுடு அவர்கள் மாநாட்டை துவக்கிவைத்தார். அப்போது புதிய இந்தியா புதிய நம்பிக்கையுடன் வடிவம் பெறுகிறது. புதியதொழில் நுட்பங்களை பயன்படுத்தும்  போது நமது ஆன்மீக பண்புகளை இழந்துவிடக் கூடாது, பிரம்மாகுமாரிகளின் செயல்களை பெருமைப்படுத்தியதோடு இந்த இயக்கம் முழு உலக்கிற்கும் பாரதகலாசாரத்தை அறிமுகம் செய்கிறது. தர்மத்தின் பெயரால் ஏற்படும் அநியாயங்களை தடுக்க பிரம்மாகுமாரிகளின் உதவி அவசியமானது என கூறினார்.

இந்தநிகழ்வில் ராஜஸ்தான் ஆளுநர் மாண்புமிகு.கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் அமைச்சர் திரு.சுக்ராம் விஷ்னோய், பிரம்மாகுமாரிகள் அமைப்பின் தலைமை  நிர்வாகி இராஜயோகினி தாதிஜானகி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். ராஜஸ்தான் ஆளுநர் மாண்புமிகு.கல்ராஜ் மிஸ்ரா அவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டமைக்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு இந்தவளாகத்தில் நுழைந்ததும் அமைதி, தூய்மை மற்றும் சொந்தவீட்டின் அனுபவம் ஏற்ப்பட்டது எனவும் நேர்மறையின் அடிப்படையில் பிரம்மாகுமாரிகள் ஏற்பாடுசெய்த இந்த உச்சிமாநாடு ஒருபுதுமையான முயற்சி என்று கூறினார்.

இயக்கத்தின் தலைமைநிர்வாகி இராஜயோகினி தாதி ஜானகி அவர்கள் “நான் யார் என்னுடையவர் யார்” என்பதன் பொருளை தெளிவுபடுத்தினார். இணை தலைமைநிர்வாகி இராஜயோகினி தாதி ரத்தன்மோகினி அவர்கள் பரமாத்மா அனைத்து மனித ஆத்மாக்களுக்கும் தந்தையாக இருக்கிறார் என்று கூறினார். துவக்கவிழாவில் பொதுசெயளாலர் இராஜயோகி பிகேநிர்வேர், உச்சிமாநாட்டு செயளாலர் இராஜயோகி பிகே.மிருத்யுஞ்சய், திட்டமேளாலர் மூத்த சகோதரி பிகேமுன்னி மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *