Fri. Sep 25th, 2020

கரூர்

அக்டோபர் 01-ஆம் தேதி சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது.  கரூர், மண்மங்கலம்  பிரம்மா குமாரிகளின் இயக்கத்தின்  சார்பாக   விஷ்வ  மகாதானி பவனில்  “வயோதிகத்தில் பெருமிதத்தோடு வாழ்வோம்” என்ற தலைப்பில் சர்வதேச முதியோர் தினம் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கரூர் பிரம்மாகுமாரிகள் அமைப்பின் பொறுப்புச் சகோதரி பி.கே. சாரதா அவர்கள் சிறப்புரையாற்றினார். அதில் சிறப்பு விருந்தினர்களாக  கரூர் மாவட்ட நீதிபதி மாண்புமிகு எம்.கிறிஸ்டோபர், வேலூர் மெடிக்கல் காலேஜ் இணை விரிவுரையாளர் டாக்டர்.பி.கே.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினார்கள். சகோதரர் டாக்டர்.பி.கே.பிரபாகரன உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளைக் செய்வித்தார். இதில் சுமார் 250 -த்திற்கும் மேற்பட்டோர் கலந்து பயனடைந்தார்கள்.

“மனம் மற்றும் உடல் நலனில் நேர்மறை எண்ணங்கள் மற்றும் பண்புகளின் பங்களிப்பு” என்ற தலைப்பில் கரூர் மருத்துவக்கல்லூரியில் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு சகோதரர் டாக்டர்.பி.கே.பிரபாகரன் அவர்கள்   Visualization and Relaxation பயிற்சிகளை வழங்கினார்.  மேலும்  How to Move with Patients, Importance of Core Values for Doctors போன்ற  செயல்  முறை  விளக்கங்கள்  மூலம்  பயிற்சிகள் அளித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மணவர்கள் பங்கேற்று பயன் பெற்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *