Fri. Feb 26th, 2021

டெல்லி

டெல்லி தேசிய தலைநகர பகுதியில் மருத்துவத் துறையை சார்ந்தவர்களுக்கு ஒருவார பிரச்சார பயணத்தை பிரம்மாகுமாரிகள் அமைப்பின் மருத்துவப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. முழுமையான நல்வாழ்வு மற்றும் வாழும்முறை ஆகிய கருத்துகளை விளக்கும் பிரச்சாரத்தின் துவக்கம் இராணுவ மருத்துவக் கல்லூரியில் ஆரம்பமானது. அப்போது கல்லூரி முதல்வர் டாக்டர் ரவீந்திர சௌத்ரி, கர்னல் S.K.Gulati, நோயியல் பேராசிரியர் டாக்டர் ஷர்மிளா துதானி, மண்டல ஒருங்கிணைப்பாளர் பிகே.கீதா, கூடுதல் ஒருங்கிணைப்பாளர் பிகே.லட்சுமி, இருதய நோய் நிபுணர் பிகே.மோகித் குப்தா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் திருவிளக்கேற்றி பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்கள். மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமெனில் மனமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அதற்கு ஆன்மீக ஞானமும் இராஜயோக தியானமும் அவசியமாக இருக்கிறது என்பதையும் வலியுறுத்தினார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு இராஜயோக தியானம் உட்பட பல ஆன்மீக பயிற்சிகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *