Fri. Sep 25th, 2020

பஞ்சாப், லூதியானா

சீக்கிய தர்மத்தை தோற்றுவித்த குருநானக் தேவரின் 550 –வது பிறந்தநாள் லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தில்” அனைத்துதர்ம நல்லிணக்க உலக உச்சி மாநாடாகக்” கொண்டாடப்பட்டது. சீக்கிய அமைப்புகளின் ஒத்துழைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாநாட்டில் உலகில் பிரசித்திப்பெற்ற மதம் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் பங்கேற்றார்கள். அவர்களில் Akaltakth sahib Jadekar Gyani har preet singh>  பிரம்மா குமாரிகள் இயக்க மூத்த இராஜயோக ஆசிரியை பிகே அனிதா, யூத அறிஞர் கெவின் Aristite> பாரதத்தின் முக்கிய இமாம் மவுலான முஹம்மது உமர் இலியாசி, நியூயார்க் திபெத்திய மைய இயக்குநர் Nicovas Vare lend> பங்குத்தந்தை அஜித் பேட்ரிக் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

குருநானக் ஷாஹிப்பின் நீதி, அமைதி மற்றும் சமத்துவ மரபு என்ற தலைப்பில் உச்சி மாநாட்டை நடத்திய குர்ஷாகப் சிங் கூறுகையில் அனைத்து மதத் தலைவர்களையும் ஒரே மேடைக்கு கொண்டுவருவதே இம்மாநாட்டின் நோக்கம் என்றும் அதன் மூலம் சமூகத்தில் அமைதியை உருவாக்க முடியும் என்றும் கூறினார்.

இராஜயோக ஆசிரியை பிகே அனிதா பேசும்பொழுது – இராஜயோகத்தின் அடிப்படை சித்தாந்தங்களை விளக்கி, இந்து முஸ்லிம், சீக்கிய மற்றும் கிறிஸ்துவர்கள் எல்லாம் நாம் அணிந்திருக்கும் முகமூடிகளாக உள்ளன என்றும் உண்மையில் நாம் அனைவரும் ஒரே ஒளிப்புள்ளியாக இருக்கும் ஆத்மாக்களாக இருக்கிறோம், நம் எல்லோருக்கும் தந்தையாக எல்லாம் வல்ல இறைவன் ஒருவர் இருக்கிறார் என்று உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *