Fri. Sep 25th, 2020

பெங்களூரு

பெங்களூரு கோட்டிகேரே தியான மைய இராஜயோக பவனில் அனுபவ ரீட்ரீட் ஏற்பாடு செய்யப்பட்டது. இயக்கத்தின் ஸ்பார்க் பிரிவு மற்றும் வி.வி.புரம் துணை மண்டலத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ரீட்ரீட் நிகழ்ச்சியில் பரமாத்மா ஞானத்தை நடைமுறை வாழ்வில் அனுபவம் செய்வது எப்படி என்பது முக்கியக் கருத்தாக இருந்தது. அங்கே ஸ்பார்க் பிரிவின் மூத்த உறுப்பினர்கள் வெவ்வேறு விசயங்களில் முழுமையான வடிவில் இறை ஞானத்தை வாழ்வில் எப்படிக் கடைபிடிப்பது என்பதை விளக்கினார்கள். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த ரீட்ரீட்டின் ஆரம்ப விழாவில் பிரிவின் தலைவரும் வி.வி.புரம் துணை மண்டல பொறுப்பாளருமான பிகே.அம்பிகா அவர்கள், பிரிவின் மண்டல ஒருங்கிணைப்பாளர் பிகே.அல்கா, தேசிய ஒருங்கிணைப்பாளர் பிகே.ஸ்ரீகாந்த், தலைமையக ஒருங்கிணைப்பாளர் பிகே.சஞ்சய், இந்துபூர் சேவை நிலைய பொறுப்புச் சகோதரி பிகே.சுனந்தா மற்றும் பல ஆன்மீக சகோதர சகோதரிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். அப்போது ஆத்ம அபிமானி நிலையில் உறுதியாக இருப்பது எப்படி போன்ற விசயங்களை விளக்கிக் கூறினார்கள். அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மதுவனத்தின் மூத்தசகோதரர் பிகே.சூரஜ் அவர்கள் கடைசிநேர முயற்சி, அவ்யக்த வளர்ப்பிற்கு பிரதிபலன் ஆகிய வகுப்புகளையும்  இராஜயோகத்தின் ஆழமான அனுபவத்தையும் பெறவைத்தார். மேலும் சகோதரி பிகே.கீதா அவர்கள் எண்ணங்களின் சக்தி மற்றும் புண்ணிய கணக்கு ஆகிய விஷயங்களில் வகுப்புகளை வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *