Fri. Sep 25th, 2020

மதுரை

மதுரை, சக்தி சரோவர் தபோவனில் அக்டோபர் 9 முதல் 13 -ஆம் தேதி வரை Silence ரிட்ரீட் என்ற யோக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மலேசியா பிரம்மா குமாரிகள் இயக்குநர் இராஜயோகினி பிகே.மீரா அவர்கள், மதுரை துணை மண்டல இயக்குநர் இராஜயோகினி பிகே.மீனாட்சி அவர்கள், தமிழக, பாண்டிச்சேரி மற்றும் தென் கேரள சேவை ஒருங்கிணைப்பாளர் பி.கே.பீனா அவர்கள், பிரம்மாகுமாரிகள் மலேசியா சகோதரி பிகே.சாலினி, மற்றும் பிகே.சிலியா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்கள். மேலும் இவர்ளுடன் மதுபன் தமிழ்த்துறைத்தலைவர் பிகே.ஜெயக்குமார் பண்புகல்வி இயக்குநர் முனைவர்.பிகே.பாண்டியமணி மேலும் துரை துணை மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி பிகே.உமா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியானது சுயத்தை மீண்டும் அரிந்து கொள்வது என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியானது 20 வருட காலமாக பிரம்மா குமாரிகள் சேவை நிலையத்தில் தன்னை அர்ப்பனித்துக் கொண்ட மூத்த சகோதரிகளுக்காக பிரத்யேகமாக நடைபெற்றது. சுமார் 150 சகோதரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் வரவேற்பு நடனமானது Ramsun’s International School, Uthangudi.  பள்ளி மாணவிகளால் நிகழ்த்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *