Fri. Feb 26th, 2021

ராஜ்கோட் – குஜராத்

குஜராத் மாநில ராஜ்கோட் நகரில் 50 ஆண்டுகள் பிரம்மா குமாரிகளின் ஈஸ்வரிய சேவை நிறைவு பெறுவதை முன்னிட்டு பிரம்மாண்டமான பொன் விழா கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் பாரத கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட மிகப்பெரிய கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்கும் விதமாக கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அப்போது சிறந்த பழக்க வழக்கங்களைக் கொண்டு நற்சமூகத்தை உருவாக்குவது, தியாகம், தவம் செய்பவர்களைக் கௌரவிப்பது ஆகிய நல்லகாரியங்களை பிரம்மாகுமாரிகள் செய்கிறார்கள் என்று பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் டெல்லி ௐசாந்தி ரீட்ரீட் சென்டர் நிர்வாகி இராஜயோகினி பிகே.ஆஷா அவர்கள், மதுபன் தலைமையக நிர்வாகச் செயலாளர் பிகே.மிருத்யுஞ்சய் அவர்கள், குஜராத் மண்டல இயக்குநர் பிகே.பாரதி ஆகியோர் ராஜ்கோட் நகர சகோதர சகோதரிகளின் 50 ஆண்டுகால சேவைக்கு கோடி மடங்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து கௌரவப்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *