Sun. Aug 9th, 2020

சென்னை

சுயத்தை மீண்டும் அறிந்துகெள்ளுதல் என்ற தலைப்பில் தமிழ்நாடு மற்றும் தென் கேரளத்தை சார்ந்த சமர்பன சகோதர, சகோதரிகளுக்கு நவம்பர் நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி  வரை அமைதி ரீட்ரீட் ஆனது ஹாப்பி வில்லேஜ் ரீட்ரீட் சென்டர் சுங்குவாச்சத்திரம் சென்னையில் நடைபெற்றது. இராஜயோகினி பிகே.சுதா திதி ரஷ்யா மற்றும் சகோதரி பிகே.வலண்டினா ரஷ்யா ஆகியோர் இந்த அமைதி ரீட்ரீட்டை நடத்தினார்கள். இதில் மூத்த சகோதர, சகோதரிகளால் நிகழ்ச்சியானது திருவிளக்கேற்றி தொடங்கப்பட்டது. ஆன்மீக வகுப்புகள், சுய பிரதிபலிப்பு அமர்வுர்கள், ஞான சிந்தனை, நான்கு தாமத்தின் யாத்திரை தியானம் மற்றும் சிறப்பான யோக வர்ணனை தியானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுமார் 150 சமர்பன சகோதர, சகோதரிகள் இதில் பங்கேற்று பயனடைந்தார்கள். நிகச்சியானது பிரம்மா குமாரிகள் தமிழ்நாடு மண்டலம் சென்னை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *