Sun. Aug 9th, 2020

பூரி

அகில இந்திய கல்வித்துறையின் வருடாந்திர கூட்டம் மற்றும் ரீட்ரீட் காட்லி இராஜயோக ரீட்ரீட் சென்டர் ((GRC)) யில் நவம்பர் 01 -ஆம் தேதி முதல் நவம்பர் 04 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் நவம்பர் 03 -ஆம் தேதியில் கல்வியாளர்கள் மாநாடும், அதே வளாகத்தில் நடைபெற்றது. புகழ் பெற்ற கல்வியாளர்கள் மற்றும் உள்ளூர் கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு கல்வித்துறை பிரமுகர்களுக்கும் “சவால்களை சமாளிப்பதற்கான பண்புகள் மற்றும் ஆன்மீகம்” என்ற தலைப்பில் இம்மாநாடானது நடைப்பெற்று. இதில் இராஜயோகினி பிகே.சுமன் தேசிய ஒருங்கிணைப்பாளர் கல்விப்பிரிவு மவுண்ட் அபு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தன்னுடைய சிறப்புரையில் கூறும்பொழுது உலக மக்கள் பெரும்பாலும் தொழிலின் அடிப்படையில் தங்களது அடையாளம் காட்டுகிறார்கள். ஆனால் நாம் அனைவரும் ஒரு ஆத்மா ஒரு ஒளிப்புள்ளி ஓர் உயிரினமாக நம்மை அடையாளம் காணவேண்டும் என்று கூறினார். ஆன்மீக கல்வி மக்கள் மத்தியில் தெய்வீக நற்பண்புகளை உருவாக்குகிறது என்றும் இது ஒரு நல்ல குடிமகனாக இருக்க எங்களுக்கு உதவுகிறது என்று கூறினார். மேலும் கற்றலின் நான்கு தூண்களைப்பற்றி எடுத்துக் கூறினார். அதாவது கற்றுக்கொள்வது, செய்யற்கற்றுகொள்வது, நன்றாக இருக்க கற்றுக்கொள்வது மற்றும் ஒன்றாக வாழ கற்றுக்கொள்வது இதுவே நான்கு தூண்கள் ஆகும என்று கூறினார்.

நிகழ்ச்சியின் முக்கிய பேச்சாளரான பிகே.பாண்டியமணி பண்பு கல்வி இயக்குனர் பிரம்மா குமாரிகள் மவுண்ட் அபு, அவர்கள் தனது உரையில் தற்போதைய கல்வி முறையில் ஞானம் மற்றும் பண்புகள் இல்லை எனவே நாளுக்கு நாள் அதன் தரம் குறைந்து வருகிறது என்று கூறினார். பண்பு கல்வி மற்றும் ஆன்மீகத்தின் மூலம் கல்வி முறை மிகவும் சிறந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று கூறினார். ஆன்மீகம் நல்ல குடியுரிமை மற்றும் நெறிமுறைகளை உருவாக்க உதவுகிறது என்று கூறினார்.

மேலும் நிகழ்ச்சியின் கௌரவ விருந்தினரான Proff.டாக்டர்.மதுமிதா தாஸ் அவர்கள் துணை வேந்தர் Fakir மோகன் பல்கலைக்கழகம் Balasore. அவர் கூறும்பொழுது ஒரு ஆசிரியருக்கு புத்தக அறிவு போதுமானதாக இல்லை. மேலும் கற்பிப்பதில் உள் ஆர்வம் இருக்க வேண்டும் என்று கூறினார். கல்வி தரம் குறைந்துவிட்டால் சமூதாயம் தானாவே வீழ்ச்சி அடையும் என்றும் கூறினார். எனவே மதிப்பு கல்வி நமது கல்வியில் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறினார்.

Proff.டாக்டர். B.C.குரு அவர்கள் KIIT பல்கலைக்கழகம் புவனேஸ்வர். அவர் உரையாற்றும் போது பிரம்மா குமாரிகளின் தன்னலமற்ற சேவையை பாராட்டினார். மேலும் மாணவர்களிடையே கவனம் மற்றும் ஒருமிக்க தன்மையை அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் இராஜயோக தியானஅறை கட்ட அரசாங்கத்தை அனுகவேண்டும் என்று கூறினார்.

பிகே.முகேஷ் அவர்கள் இணை பேராசிரியர் JECRC பொறியியல் கல்லூரி ஜெய்பூர். கூறும் பொழுது இளைஞர்களின் எண்ணங்களை மேம்படுத்துவதற்கு இராஜயோக தியானத்தின் மூலம் முழுமையான ஒருமுக தன்மை பெறுவதற்காக JECRC -யில் அவர் தொடங்கிய இராஜயோக Thought lab பற்றி எடுத்துக் கூறினார். சுமார் 200 மாணவர்கள் அவர்களுக்குள் ஒரு நேர்மறையான மாற்றம் மற்றும் அவர்களின் நினைவு சக்தி அதிகரிப்பதை கண்கூடாக கண்டிருக்கிறார்கள் என்று எடுத்து கூறினார். பல மாணவர்கள் 20 -திற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஆராய்சி திட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர் என்றும். இது வாழ்க்கையின் ஆன்மீக பரிமாணத்தைப்பற்றிய நுண்ணறிவுகளை பெற உதவுகிறது என்றும் கூறினார்.

Proff. ஹரிஹர ஹோடா (Hota) ஸ்ரீ ஜெகன்நாத் சமஸ்கிருத பல்கலைக்கழகம் பூரி  அவர்கள் கூறும்போது முறையான கல்வி மாணவர்களை பணிவானவராக்குகிறது. அவர்ளை ஒற்றுமை உடையவராக இருக்கச் செய்கிறது. மேலும் அனைத்துவித எதிர்மறை சக்திகளிலிருந்து விடுப்பட உதவிச்செய்கிறது என்று கூறினார்.

டாக்டர்.பிகே.நிரூபமா இயக்குனர் Godly Rajayoga Retreat பிரம்மா குமாரிகள் துணை மண்டலம் பூரி அவர்கள் உரையாற்றும் போது பண்புக் கல்வி மற்றுமே ஒரு மனிதனை பண்புள்ளவனாக மற்றும் நல்ல குடிமகனாக மாற்றுவதற்கான ஒரே கருவி என்று கூறினார்.

டாக்டர் பிகே.சீமா இணைப் பேராசிரியர் கல்வியியல் கல்லூரி லூதியானா அவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அமைதியின் அனுபவத்தை செய்வித்தார். சகோதரி. S.M.தாஸ் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சர்வ சிக்ஷா அபியான் பூரி, அனைவருக்கும் நன்றியுரையை அளித்தார். டாக்டர் பிகே.சத்தியானந்தா அவர்கள் மாநாட்டை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்திச் சென்றார். இதில் சுமார் 400 -க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் பங்கேற்று அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கான நுட்பங்களை கற்றுக்கொண்டனர். இம்மாநாட்டை தவிர SCS காலேஜ் பூரி, ரோட்டரி கிளப் ஜெகநாதம்பூரி மற்றும் சூரஜ் மாலாஷா டிகிரி கல்லூரி பூரி ஆகிய இடங்களில் வெவ்வெறு தலைப்புகளில் நான்கு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இதில் சுமார் 1000 -திற்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்று பயனடைந்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *