Sun. Aug 9th, 2020

மதுரை

மதுரை விஷ்வ சாந்தி பவனில் நவம்பர் 10  -ஆம் தேதி வாழ்க்கையின் ஒவ்வொரு நேரத்தையும் மகிழ்ச்சிகரமானதாக அமைத்துக்கொள்வதற்கு நம்மிடையே நற்குணங்களை கடைபிடிப்பது அவசியம் என்று ரஷ்யா மாஸ்கோ சகோதரி இராஜயோகினி பிகே.சுதா திதி அவர்கள் கூறினார்கள். மேலும் மன்னிக்கும் திறன் வேண்டும், முடிந்தவற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு வரக்கூடியவற்றை எதிர்கொள்ள தன்னை ஆயத்தம் செய்து கொள்ள வேண்டும், சுயநலமற்ற சேவை செய்ய வேண்டும், அனைத்து சூழ்நிலைகளிலும் தன்னை சமநிலையாக வைத்துக் கொள்ள வேண்டும், தியானத்தின் மூலமாக மனம் சாந்தமாக இருப்பது மட்டுமல்லாது உடலும் ஆரோக்கியமாக இருக்கும், உடலின் அனைத்து சுரப்பிகளும் சீராக இருக்கும் என்று கூறினார். மேலும் மதுரை துணை மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி பிகே.உமா அவர்கள் மன இறுக்கமே பலவிதமான நோய்களுக்கு காரணம் உள்ளது. மன இறுக்கத்தை போக்கும் இராஜயோக தியான அனுபவம் செய்வித்தார்கள். மூத்த சகோதரி பிகே.செல்வி அவர்கள் இராஜயோகினி பிகே.சுதா திதி அவர்களின் அறிமுகத்தை வழங்கினார். மேலும் மூத்த சகோதரி பிகே.செந்தாமரை அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் சகோதரி பிகே.கோமதி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 60 -திற்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்த மதுரை மாநகர முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *