Sun. Aug 9th, 2020

ஹைதராபாத்

ஹைதராபாத் சாந்தி சரோவர் ரீட்ரீட் சென்டரில் Hope- Happiness- Harmony என்ற கருத்தில் திட்ட வெளியிடு மற்றும் ஆக்கபூர்வமான நிகழ்ச்சி பிரம்மா குமாரிகள் பெண்கள் பிரிவால் தெலுங்கானா மாநிலத்தில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர். தமிழிசை சௌந்தராஜன் விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் அவர் தன்னுடைய வாழ்க்கையின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பிரம்மா குமாரிகள் அமைப்பின் கருத்துகள் மற்றும் ஆன்மீகத்தை சுய முன்னேற்றத்தின் ஆதாரம் என்று கூறினார். மேலும் இவ்வமைப்பால் உருவாக்கப்பட்ட கண்காட்சியை துவக்கி வைத்தார். இவ்விழாவில் ஆளுநருடன் எவரெஸ்ட் சிகரத்தின் ஏறிய முதல் இந்திய பெண் பத்மஸ்ரீ.அருணிமா சின்கா, பாலிவுட் திரைப்பட நடிகை கிரேஷிசிங், தலைமுடியால் டிரக்கை இழத்து கின்னஸ் உலக சாதனை படைத்த பிகே.ராணி, மாநில மகளீர் மற்றும் குழந்தைகள் நலத்துறை முதன்மை செயலாளர் எம்.ஜெகதீஸ்வர், இந்திய பெண்கள் தொழில் முனைவோர் சங்கத்தின் முன்னாள் தலைவர் இராமதேவி, முன்னாள் லஞ்ச ஒழிப்பு ஆணையர். ரஞ்சணாகுமார், பிரம்மாகுமாரிகள் பெண் பிரிவு தலைவர் இராஜயோகினி பிகே.சக்ரதாரி ஆகியோர் திருவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *