Sun. Aug 9th, 2020

அபுரோடு, இராஜஸ்தான்

இராஜஸ்தான், அபுரோடு பிரம்மா குமாரிகள் தலைமையக டைமண்ட் ஹாலில் நடைபெற்ற நீரிழிவு நோயிலிருந்து விடுதலை பெறவும், அதனை பற்றிய விழிப்புணர்வு தரவும் சுகாதாரத்துறையின் மூலமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாடெங்கிலும் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் மன அழுத்தம், சமநிலையற்ற உணவு, ஒழுங்கற்ற நடைமுறைகள் முதலியவை பலவகையான நோய்களை கொண்டு வருகின்றன. அவைகளில் மிகவும் ஆபத்தாக இருப்பது நீரிழிவு நோய் ஏனென்றால் அது வெளியே தெரிவது இல்லை. ஆனால் உள்ளே சீரழிவை தருகிறது. நிகழ்ச்சியின் துவக்க விழாவில் அமைப்பின் தலைமை இயக்குனர் இராஜயோகினி தாதி ஜானகி அவர்கள் இராஜயோகத்தின் மூலமாக ஆரோக்கியமான வாழ்க்கை பெறுவது எப்படி என்று விளக்கம் தந்தார்.

அப்போது குளோபல் மருத்துவ மனையின் நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் ஸ்ரீமந்த் சாஹு அவர்கள் இந்த நோய் வேகமாக வளர்ந்து வருவதையும், வயது வித்தியாசம் பாராமல் எல்லோரும் பாதிக்கப்படுவதையும் சொல்லி அதை சரியான நேரத்தில் கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் இயக்கத்தின் பொதுச் செயலாளர் இராஜயோகி பிகே.நிர்வேர், கூடுதல் பொதுச் செயலாளர் இராஜயோகி பிகே பிரிஜ்மோகன், மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மண்டல இயக்குனர் பிகே.சந்தோஷ், நிர்வாக செயலாளர் இராஜயோகி பிகே.மிருத்யுஞ்சய், ஊடக பிரிவு தலைவர் இராஜயோகி பிகே.கருணா, சமூக நடவடிக்கை குழுத்தலைவர் பிகே.பனாரசிலால் முதலிய முக்கிய பிரமூகர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *