Sun. Aug 9th, 2020

சென்னை அடையாறு

நவம்பர் 16 -ஆம் தேதி பி.டி. தியாகராயர் ஹால், T.நகர் சென்னையில் AL4S சேரிட்டபில் டிரஸ்ட் மற்றும் குளோபல் பீஸ் பல்கலைக்கழகம் அமெரிக்கா இணைந்து இராஜயோகினி மூத்த சகோதரி பிகே.முத்துமணி அவர்களுக்கு கௌரவ முனைவர் பட்டமானது சகோதரி அவர்கள் பல்வேறு இடங்களில், பல்வேறு துறையைச் சார்ந்த மனிதர்களுக்கு இறைவனைப் பற்றிய  செய்தியை பரப்புவதின் மூலம் உலகில் அமைதியை நிலை நாட்டுவதற்கான சேவை செய்தமைக்காக அவர்களின் ஆன்மீக சேவையை பாராட்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது Rtn.திருமதி.வசந்தி ரெங்கநாதன், திருமதி.ஜெயந்தி ராஜு நிறுவனர் RJ தமிழ்மணி அறக்கட்டளை, ஹிலர். P.கார்த்திகேயன், திருமதி.அணுராதா அமர் வேதங்கள் ஒப்புவித்தலின் வல்லுனர், திருமதி.சாதனா ராஜ்குமார் சமூக ஆர்வலர் ஆகியோர்களுக்கும் நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது. மாண்புமிகு நீதிபதி. SK.கிருஷ்ணன் முன்னாள் நீதிபதி சென்னை ஐகோர்ட், டாக்டர் லலிதா சூரியநாராயணன் நிர்வாக இயக்குனர் AL4S சேரிட்டபில் டிரஸ்ட், திரு. சூரியநாராயணன் அறங்காவர் AL4S சேரிட்டபில் டிரஸ்ட், திரு.J.பாலசுப்பிரமணியன் நிறுவனர் சாவித்திரி பவுண்டேசன் மற்றும் கனரா ரோபிக்கோ மியூச்சுவர் பண்ட் தலைவர், திருமதி.ஜெயந்தி ராஜு நிறுவனர் RJ தமிழ்மணி அறக்கட்டளை, திரு.ஜான்பீட்டர் ஆலோசகர் குலோபர் அச்சுவர்ஸ் கவுன்சில் GPU, திரு.ராயல் பிரசண்ட் செனட்டர் GPU,  திரு.அமீர் திரைப்பட இயக்குனர், டாக்டர். N.பஞ்சாபகேசன் நிறுவனர் சாய்முருகா மேட்ரி மோனியல், சென்னை அடையாறு மூத்த சகோதரி இராஜயோகினி பிகே. முத்துமணி ஆகியோர் மேடையில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள்.

இந்நிகழ்ச்சியில் சகோதரி பிகே.முத்துமணி அவர்கள் உரையாற்றும் போது நாம் அனைவரும் மகிழ்ச்சியாக லேசாக இருக்க வேண்டும். நாம் எப்பொழுது இறை தந்தையிடமிருந்து எப்பொழுது ஞான ஒளி மற்றும் சக்தியை பெறுகின்றமோ அப்பொழுது அனைத்தும் சரியாகிவிடும்.   எல்லா புகழும் இறைவனுக்கே என்று பிரம்மா குமாரி மூத்த சகோதரி இராஜயோகி பிகே.முத்துமணி அவர்கள் உறையாற்றினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *