Sun. Aug 9th, 2020

மதுரை

உலகளாவிய பிரம்மா குமாரிகள் இராஜயோக தியான அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்பான இராஜயோக கல்வி மற்றும் ஆராட்சி அறக்கட்டளையின் சேவைப்பிரிவு சமூக இந்திய நேரு யுவாகேந்திரியம், சர்வதேச அரிமாசங்கம் மற்றும் சர்வதேச ரோட்டரி சங்கத்துடன் இணைந்து பிரத்தியேகமாக சமூகசேவை ஆர்வலர்களுக்கான தேசிய அளவிளான மாநாடு உன்னத சமூகசேவைக்காக சுய மேம்பாடு என்ற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ளது. அதற்கான துவக்க விழாவானது நவமபர் 17 -ஆம் தேதி காலை 10.00 மணிக்கு மதுரை இராஜாமுத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரம்மா குமாரிகள் சமூகசேவைப் பிரிவு துணைத் தலைவர் இராஜயோகி பிகே.அமீர்சந்த், டெல்லி இராஜயோக தியான நிலையங்களின் இயக்குனர். இராஜயோகினி சகோதரி புஷ்பா தீதிஜி, மதிப்பிற்குரிய நீதியரசர் முனைவர் பி.ஜோதிமணி, இராஜயோகி முனைவர் பிகே.பாண்டியமணி இயக்குநர் பண்புக்கல்வி நிகழ்வுகள், மவுண்ட்அபு, இராஜயோகினி பிகே.உமா, மதுரை துணை மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர்,  திரு.ஜமீர் பாஷா ரோட்டரி சங்க ஆளுநர் ஆகியோர் கலந்து சிறப்புரையாற்றினர்கள். மதுரை துணை மண்டல இயக்குனர் இராஜயோகினி மூத்த சகோதரி பிகே.மீனாட்சி அவர்கள் இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்கள்.

இராஜயோகினி பிகே.புஷ்பா தீதிஜி அவர்கள் தமது தலைமை உரையில் சமூகசேவை செய்வற்கு சுயசக்தி மேம்பாடு அவசியம். உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பொறுப்பு உள்ளது. பிறரின் குறைபார்க்காமல் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும். இறைவன் இந்த உலகை அமைதி மற்றும் ஒற்றுமை நிறைந்த உலகமாகத்தான் படைத்தார். எனவே இன்றைய துக்கமான உலகை நாம் மாற்ற வேண்டும். இறைவனின் மகாவாக்கியம் என்னவென்றால் அனைவருக்கும் சுகம் தரவேண்டும். துக்கம் தரக்கூடாது. சமுதாயத்திற்கும் இயற்கைக்கும் நாம் சேவை செய்தால் இறைவன் நமக்கு உதவி செய்வார். அதற்கு ஒரே பலம் ஒரே நம்பிக்கை இறைவனிடம் வைக்க வேண்டும். தைரியம் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இராஜயோகி பிகே.அமீர்சந்த் தமது உரையில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் சேவையைப் பாராட்டி இந்திய அரசு, தூய்மை பாரத இயக்கத்தின் தூதுவராக பிரம்மா குமாரிகள் இயக்கத்தின்  தலைமை நிர்வாகி இராஜயோகினி  தாதிஜி ஜானகிஜி அவர்களை நியமித்துள்ளது. மாணவர்கள் தங்களது வாழ்க்கையை பண்புள்ளதாக ஆக்க பிரம்மா குமாரிகள் அமைப்பில் கல்விக் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. குறிப்பாக உலகத்தில் வசதிவாய்ப்பு இல்லாதவர்களை கவனம் கொடுத்து அவர்களுக்கு சேவை செய்து வருகின்றது. நம்முள் இருக்கும் ஆன்மீக சக்தியை விழிப்படையச் செய்து நம் வாழ்வை தியானத்தின் மூலம் வளம் பெறச் செய்ய வேண்டும்.

சகோதரி பிகே.செல்வி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இராஜயோகி முனைவர் பிகே.பாண்டியமணி அவர்கள் வித்யாலயத்தின் அறிமுகம் வழங்க, மதிப்பிற்குரிய நீதியரசர் டாக்டர் பி.ஜோதிமணி மாநில தேசிய பசுமை திடக்கழிவு மேலாண்மை குழுவின் தலைவர் அவர்கள் சிறப்புரையாற்றினர். அதில் பிரம்மா குமாரிகள் சகோதரிகள் தாய்மை உணர்வுடன் சேவை செய்து வருகின்றார்கள். இறை ஞானம் என்பது வாழ்வை செம்மைப் படுத்தவல்லது. மேலைநாட்டினர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். இறைசக்தியோடு சேர்த்து இயற்கையின் வளமும் தேவை. இயற்கையை அழிப்பதினால் நமது அன்றாட வாழ்க்கை பாதிப்படைகின்றது. இளைஞர்களிடமுள்ள போதைப் பழக்கத்தை ஒழிப்பதில் முக்கிய சேவை இவ்வித்தியாலம் புரிந்து வருகின்றது. அமைதி வேண்டும் பொழுது இறைவனைதான் நினைக்கின்றோம். பணம் மட்டும் வியாதியை குணப்படுத்தாது. அதற்கு இறைவனின் துணையும் வேண்டும். எனவே இச்சேவையாற்றி வரும் பிரம்மா குமாரிகளுக்கு அனைத்து ஒத்துழைப்பும் கொடுக்கவேண்டும். ஐக்கிய நாடுகளின் சபையிலும் இவர்களின் தொண்டிற்கு தனி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதனை தொடர்ந்து ரோட்டரி சங்க ஆளுநர் திரு.ஜமீர் பாஷா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சுயநலமற்ற சேவை சுயத்தைவிட மேலானது. பிரம்மா குமாரிகள் சகோதரிகள் அனைவருக்கும் அமைதி ஏற்படுத்தும் சுயநலமற்ற சேவை செய்து வருகின்றார்கள். ஆன்மீகம் என்றாலே தெய்வீகம். நாம் ஒவ்வொரு காரியத்தை இறை நினைவோடு செய்யும் போது அது தெய்வீகமாக மாறுகின்றது. மனுநீதி சாஸ்திரத்தில் நாம் செய்யும் அனைத்து காரியத்தையும் தெய்வீக இறை காரியமாக செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்று கூறினார்.

மனக் கிளர்ச்சியில் இருந்து விடுவிக்கும் தியானத்தின் மூலம் அமைதியின் அனுபவத்தினை சகோதரி பிகே.உமா அவர்கள் செய்வித்தார்கள். பல அமர்வுகளில் முக்கியமாக சமூக சேவையில் புதிய பரிமாணம் மற்றும் சமூக சேவையில் நற்பண்புகள், ஆன்மீகத்தின் பங்கு பற்றி முனைவர் சகோதரர் பிகே.பாண்டியமணி அவர்கள் தனது உரையில் வாழ்க்கை தரம் முற்றிலும் மாறிவிட்டது. எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நிகழ்காலத்தில் கர்ம தத்துவத்தை அறிந்து நல்ல கர்மங்களை செய்ய வேண்டும். மனதிற்குள் நிறைய பிரச்சனைகளை சிந்தித்து கொண்டிருக்கிறோம். அதற்கு பதிலாக ஆக்கபூர்வமான சிந்தனைகளை செய்ய வேண்டும்.

சகோதரி பிகே.கோதை நிர்வாக இயக்குநர் இராமலிங்கா மில்ஸ் அருப்புக்கோட்டை அவர்கள் தமது உரையில் ஆன்மீகம் என்றால் புரிதல், உணர்தல், இணைதல் ஆகும். வள்ளல் ஆகுவதற்கு பணம் தேவையில்லை. பரந்தமனம் தான் தேவை. அப்பொழுதுதான் திருப்தி அடைந்து சமூக சேவை செய்ய முடியும். பிரம்மா குமாரிகளிடம் நல்லமனம் உள்ளதால் உலகளாவிய சேவை செய்கிறார்கள் என்று கூறினார். மேலும் மகிழ்ச்சியான வாழ்வு மற்றும் அமைதியான சமுதாயத்திற்கு வழி கோலும் ஆன்மீகம் என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது. அதில் நிர்வாகி தபோவன் ரிசார்ட் கோடை திரு. S.தீனதயாளன் அவர்கள் மற்றும் மூத்த இராஜயோக ஆசிரியர் செந்தாமரை அவர்கள் தனது உரையில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் புரிந்து கொள்ள ஆன்மீகம் உதவி செய்கிறது. ஆன்மீகம் மூலம் எதிர்மறை சிந்தனைகளை ஆக்கபூர்வமாக மாற்ற முடியும் என்று கூறினார்கள்.  விருதுநகர் பொறுப்புச் சகோதரர் பிகே.பாலசுந்தரம் மற்றும் G.M.S.அறக்கட்டளை மற்றும் வாழை குருப்ஸ் நிறுவனர் திருமதி.இராஜகுமாரி ஜீவகன் அவர்கள், இராமேஸ்வர மூத்த இராஜயோக ஆசிரியை பிகே.இராதிகா அவர்கள் பங்கேற்று கருத்துகளை  எடுத்துரைத்தனர்.

நிறைவு விழாவில் லயன்ஸ் திரு.கே.ஜி.பிரகாஷ் அவர்கள் மற்றும் பெரீஸ் குழுமத் தலைவர் திருமகேந்திரவேல் அவர்கள், J.பாலசுப்ரமணியன் Founder & Trusty Savithiri   Fountation Chennai ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் 800-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பலன் அடைந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *