Sun. Aug 9th, 2020

கோண்டியா – மஹாரஸ்ட்ரா

மஹாரஸ்ட்ராவின் கோண்டியாவில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் மூலமாக என்.எம்.டி.கல்லூரியில் விவசாய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கண்காட்சியில் யோகிக் விவசாய முறை குறித்த கண்காட்சியை பிரம்மாகுமாரிகள் ஏற்பாடு செய்தனர். உத்திரப்பிரதேச ஆளுநர் மாண்புமிகு ஆனந்தி பென் படேல், அதானி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கௌதம் அதானி, கோகிலாபேன் திருபாய் அம்பானி மருத்துவமனையின் தலைவர் திரு.டீனா அம்பானி, அதானி நிறுவனத்தின் தலைவி டாக்டர்.ப்ரீதி அதானி, பிரபல எழுத்தாளரும் கலைஞருமான மனோஜ் ஜோசி, முன்னாள் வீரர் ஜெயந்த் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்நேரத்தில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் சார்பாக சகோதரர் பி.கே.மஹேந்திரா யோகிகேத்தியின் பலன்கள் மற்றும் யோகிகேத்தியின் மூலம் கிடைத்த விளைச்சலை பற்றி அனைவருக்கும் விவரித்தார். மேலும் கோண்டியா கல்வி நிறுவனத்தின் தலைவர் வர்ஷா பட்டேல், பொதுச் செயலாளர் ராஜேந்திர ஜெயின், எம்.எல.ஏ.சந்த்ரிகாபுரே மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *