Sun. Aug 9th, 2020

சாந்திவன் – அபுரோடு

      பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் தலைமையகமான சாந்திவனில் Value Education Festival    மூன்று நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவில் ஜார்கண்ட் மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் திருமதி.திரௌபதி முர்மு முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். பிரம்மா குமாரிகளின் கல்விப் பிரிவின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 10ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவினை ஆளுநர் திருமதி.திரௌபதி முர்மு, யஷவந்த்ராவ் சவுகான் முக்த் பள்ளியின்; இயக்குநர் திரு.ஜெய்தீப் நிகம், ஞான சரோவரின் இயக்குனர் டாக்டர்.பி.கே.நிர்மலா, பிரம்மாகுமாரிகள் கல்விப் பிரிவின் தலைவர் டாக்டர் பி.கே.மிருத்யுஞ்சய், ஊடகப் பிரிவின் தலைவர் பி.கே.கருணா, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர்.செல்வநாராயணன், பண்புக் கல்வி இயக்குநர் Dr.பி.கே.பாண்டியமணி மற்றும் மற்ற விருந்தினர்கள்; பிரம்மாகுமாரிகளின் கல்விப் பிரிவு வழங்கும் மதிப்பு அடிப்படையிலான படிப்புகளை பற்றி எடுத்துரைத்தனர். ஆளுநர் திருமதி.திரௌபதி முர்மு தனது உரையில், நாம் மறந்துவிட்ட பண்புக் கல்வி மற்றும் ஆன்மீகக் கல்வியினை, பரம்பிதா பரமாத்மா ஆன்மீகத்தின் மூலம் தற்பொழுது வழங்குகின்றார் என்று கூறினார். கல்விப் பிரிவின் தலைவர் டாக்டர் பி.கே.மிருத்யுஞ்சய், அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் மதிப்புக்கல்வியினை கற்றுத் தருவதே பிரம்மாகுமாரிகள் கல்விப் பிரிவின் லட்சியம் என்று தனது உரையில் எடுத்துரைத்தார். விழாவின் போது ஆளுநர் சில மாணவர்களுக்கு பட்டம் அளித்து விருதுகளை வழங்கினார். பி.கே.ஜித்து, பி.கே.பரத், பி.கே.ஜெயகுமார், பி.கே.லீனா, பி.கெ.லோகநாதன், னுச.பி.கே.பாண்டியமணி அவர்களுக்கு பட்டத்தை கொடத்து கௌரவித்தார்கள். அதன் பிறகு பி.கே.நிர்மலா ஆளுநருக்கு சால்வை அணவித்து தெய்வீகப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுரேந்திர சிங் சோலங்கி, கூடுதல் காவல்துறை அதிகாரி ஹர்ஷ, உதவி காவல் துறை கண்காணிப்பாளர் பிரவின் குமார், அபு சாலை காவல் நிலையத்திலிருநு;து சி.ஐ.ஆனந்த்குமார், நகர காவல்துறை அதிகாரி அனில் குமார், கல்விப் பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரம்மாகுமாரி சுமன், பி.கே.குப்தாஜி மற்றும் அனேக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பங்கேற்க வந்த இளைஞர்கள் அலங்கரிக்கப்பட்ட ஆடைகளில் ஒரு பேரணியை நடத்தி, மதிப்பு அடிப்படையிலானக் கல்வியை ஊக்குவிப்பதாக உறுதியளித்தனர். இறுதியில் மாண்புமிகு ஆளுநர் திரௌபதி முர்மு பிரம்மாகுமாரிகள் நிற்வாகத்;தின் இணைத் தலைமை நிர்வாகி இராஜயோகினி இரத்தன்மோகினி தாதியை சந்தித்து இராஜயோக தியானம் குறித்து தெய்வீக சேவைகளை பற்றி தெரிந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *