Sun. Aug 9th, 2020

சென்னை – அடையாறு

சென்னை அடையாறில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பிப்ரவரி 4ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள புற்றுநோயாளிகளுக்கான ஸ்ரீமாதா அறக்கட்டளையில் அனேக விதமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பிரம்மாகுமாரிகள் இயக்கத்தினர் ஏற்பாடு செய்தனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு தங்குவதற்கு இடம், உணவு மற்றும் மருத்துவம் ஆகியவற்றை இலவசமாக வழங்க ஸ்ரீமாதா அளக்கட்டளையானது 2000 – த்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் அங்கு தங்கியிருக்கும் நோயாளிகளை ஊக்குவிப்பதற்காக சிறப்பு பயிற்சிகள், சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நோயாளிகளுக்கு அதிகாரம் அளித்தல், நேர்மறையாக மற்றும் ஆரோக்கியமாக எப்படி இருப்பது என்பதனை பற்றி முகாம்கள் நடத்தப்பட்டது. “சிகிச்சையின் போது எவ்வாறு பயமின்றி இருப்பது” மற்றும் “உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான நீர் சிகிச்சை” போன்ற தலைப்புகளில் சென்னை அடையாறு கிளை நிலையத்தின் பொறுப்பு சகோதரி பி.கே.முத்துமணி சொற்பொழிவு வழங்கினார். மேலும் நீர் சிகிச்சை எவ்வாறு செய்வது என்பதனை பற்றிய வர்ணனைகளை கொடுத்து நோயாளிகளுக்கு தியான பயிற்சியினை அளித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் நோயாளிகள் மற்றும் சுகாதார குழுவிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இந்தப் பயிற்சியானது புற்றுநோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *