Sun. Aug 9th, 2020

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 5ஆம் தேதி பெரியகோவில் கும்பாபிஷேகத்திற்காக தற்காலிகமாக பேருந்து நிலையத்தில் இலவச காலணி பாதுகாப்பு அரங்கம் அமைக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை வழங்கினார். இந்த சேவையை தஞ்சாவூர் பிரம்மா குமாரிகள் சகோதர சகோதரிகள் முழுமையான ஆர்வத்துடன் செய்தனர். அனைத்து பொது மக்களுக்கும் இறைஞான செய்தி அளிக்கப்பட்டது. இதில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் கமிஷ்னர் பிரம்மாகுமாரிகள் செய்துவரும் இந்த சேவைகளை பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். தஞ்சாவு+ர் கிளைநிலைய பொறுப்பு சகோதரி பி.கே.ஞானசௌந்தரி முன்னின்று சேவைகளை நடத்திவைத்தார்.   

தஞ்சாவூர் பெரியகோவில் கும்பாபிஷேகத்திற்காக  சாலை ஓரங்களில் தூய்மை பணிகள் நடைபெற்றது. கலெக்டரின் ஆலோசனையில் நடைபெற்ற இப்பணியில் தஞ்சாவூர் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தை சேர்ந்த சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு சேவை செய்தனர். இப்பணியினை தஞ்சாவூர் கிளைநிலைய பொறுப்பு சகோதரி பி.கே.ஞானசௌந்தரி தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *