Sun. Aug 9th, 2020

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று இராஜயோக தியானநிலைய திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய விருந்தினர்களாக நாகப்பட்டினம் இராஜயோக நிலைய பொறுப்பு சகோதரர் பி.கே.கணேஷ, திருத்துறைபூண்டி காவல்துறை ஆய்வாளர் ரூபாவதி, திருத்துறைபூண்டி டெல்டா ரோட்டரி சங்க செயளாலர் திரு.மணிவாசகம், சாந்தி கண்ஸ்டரக்ஷன் உரிமையாளர் திரு.செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவினை திருவாரூர் மற்றம் திருத்துறைபு+ண்டி தியான நிலையங்களின் பொறுப்பு சகோதரி பி.கே.முத்துலெட்சுமி தலைமை ஏற்று நடத்தி வைத்தார். மேலும் மாலையில் நடைபெற்ற இராஜயோக தியான பயிற்சி முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *