Sun. Aug 9th, 2020

பஞ்சாப்

பஞ்சாப் மோஹாலி பிரம்மாகுமாரிகள் தியான நிலையத்தில் ஷிவாலி கல்வி நிறுவனத்தின் பி.எட் பயிலும் ஆசிரியர் பயிற்சியாளர்களுக்கு Model teacher and motivational teacher என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக மதுபனிலிருந்து சகோதரர் பி.கே.பகவான், ஷிவாலி பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் ஆசிரியை சகோதரி பி.கே.சோனம், சகோதரர் பி.கே.ராகேஷ் ஷிவாலி கல்வி நிறுவனத்தின் முதல்வர் டாக்டர்.ஜோதி சோனி மேலும் அங்கு பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். பி.கே பகவான் தனது உரையில் மோசமடைந்து வரும் இன்றைய சூழ்நிலையை பார்க்கும் போது சமுதாயத்தை மேம்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது என்று கூறினார். மேலும் ஆசிரியர்கள் என்றாலே தனது வாழ்க்கையில் எண்ணங்களின் மூலம் மற்றவர்களுக்கு பாடம் கற்பிக்கக் கூடியவர்கள் என்று கூறினார். மாணவர்கள் கல்வி கற்ற பின்னரும் மோசமாக ஆகின்றார்கள் என்றால் அதற்கு காரணம் ஆசிரியரிடம் உள்ள குறைபாடு ஆகும். ஆசிரியர்களிடம் உள்ள சன்ஸ்காரம் மாணவர்களிடமும் பிரதிபலிக்கிறது என்று கூறினார். ஆசிரியர் ஆக வேண்டும் என்றால் அதற்கு நற்குணங்கள் அவசியமாக இருக்கிறது என்றார். மேலும் கல்வியில் பௌதீக முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் நன்னெறியில் முன்னேற்றம் ஏற்படுவதில்லை என்றார். தன்னுடைய வாழ்க்கையின் கருத்துகளின் அடிப்படையில் நன்னெறி பாடங்களை கற்பிக்க வேண்டியது அவசியம் என்றார். ஆசிரியர்களினுடைய பேச்சு, பழக்கவழக்கங்கள், நடத்தை ஆகியவை மாணவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார். சமுதாயத்திற்க்கு கல்வி கற்ப்பிக்கும் அமைப்பு முறைகளில் மாற்றம் அவசியமாக இருக்கிறது. தங்களுடைய மாற்றத்தின் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது அவசியமாக இருக்கிறது என்று கூறினார்.

பேராசிரியர் டாக்டர்.ஜோதி சோனி மாற்றத்தை கொண்டு வருவதற்கு ஆசிரியர்களே பொறுப்பு என்று கூறினார். ஆசிரியர்கள் தங்களது நடத்தையில் கவனம் செலுத்த ஆன்மீகக் கல்வியின் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடவேண்டும் என்று கூறினார்.

 ஷிவாலி பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் ஆசிரியை சகோதரி பி.கே.சோனம் ஒரு விளக்கினால் முழு அறைக்கும் வெளிச்சம் தர இயலாது, அதனால் அனைவரும் இணைந்து மாணவர்களுக்கு நன்னெறிகளை கற்பிப்பதை சேவையாக செய்ய வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் இராஜயோக தியான பயிற்சி வழங்கப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *