Thu. Mar 28th, 2024

திண்டிவனம்

திண்டிவனம் பிரம்மாகுமாரிகள் கிளை நிலையம் சார்பாக “எனது தமிழ் நாடு போதையற்ற தழிழ் நாடு” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு போதை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தனியார் கல்லூரியில் ஏற்ப்பாடு செய்தனர். தமிழக அரசு பிரம்மாகுமாரிகளுக்கு இந்த விழிப்புணர்வை அனைத்து கல்லூரிகளிலும் ஏற்படுத்த அதிகாரபூர்வ அனுமதியினை அளித்துள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக திண்டிவனம் தனைசார் ஆட்சியர் டாக்டர். அணு IAS திண்டிவனம் அனைத்து காவல் நிலையத்தின் மேலாளர் திருமதி. விஜி, மேலும் சமூக நல சேவகர் திரு.அய்யப்பன் மற்றும் ஈரோடு மாவட்ட பிரம்மாகுமாரிகள் பொருப்பு சகோதரர் திரு.ரவி ஆகியோர் கொண்டனர்.

திண்டிவனம் தனைசார் ஆட்சியர் டாக்டர். அணு IAS புகையிலையின் பாதிப்புகள் பற்றியும் அதனால் ஏற்ப்படும் விளைவுகள் பற்றியும் எடுத்துறைத்தார். மேலும் தீய நண்பர்களிடமிருந்து மாணவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். திருமதி. விஜி தனது உரையில் இந்த காலத்தில் மாணவர்கள் Whats app, facebook, youtube, internet, போன்றவைகளுக்கு அடிமையாக உள்ளனர். இதனால் பல குற்ற சம்பவங்கள் நடக்கின்றன, ஆகையால் முன் பின் தெரியாதவர்களிடம் பழக வேண்டாம் என்று எச்சரிக்கை வழங்கினார்.

சகோதரர் பி.கே.ரவி தனது உரையில் மாணவர்கள் தங்களை அனைத்து அடிமைதனத்திலிருந்து பாதுகாத்து கொள்ள தியானம் கற்க வேண்டியது அவசியமாக இருக்கிறது என்று கூறினார். பிரம்மாகுமாரிகள் உலகில் 147 நாடுகளில் 84 வருடங்களாக இலவசமாக இராஜயோகம் கற்றுதரப்படுகிறது என்று கூறினார். இதில் சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர். திண்டிவனம் பிரம்மாகுமாரிகள் கிளைநிலைய பொறுப்பு சகோதரி பி.கே.உமாவதி இந்நிகழ்ச்சியினை தலைமை தாங்கி நடத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *