Udumalpet,Tamil Nadu

பேருந்து நிலையம் உழவர் சந்தை மற்றும் இரயில் நிலையங்களில் புகையிலை விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. இதில் முக்கிய விருந்தினர்களாக உணவு பாதுகாப்பு அலுவலர் திரு. S.அம்ஜதி இப்ராஹிம்கான் மற்றும் உழவர் சந்தையின் மேற்பார்வையாளர் திரு.மலைச்சாமி ஆகியோர் பங்கு பெற்றார்கள்.
மே 26 – ஆம் தேதி உடுமலைப்பேட்டையில் Peace Land -இல் குழந்தைகளுக்கான கோடைக்கால சிறப்பு பயிற்சிகள் நடைபெற்றது. நற்பண்புகளை அதிகரித்துக்கொள்ள செயல்முறை பயிற்சிகள், தியானத்தின் அனுபவம், ஞாபகசக்தியை அதிகரித்துக் கொள்வதற்கான விளையாட்டுகள், உடற்பயிற்சிகள் நடத்தப்பெற்றது. உடுமலைப்பேட்டை பொறுப்பு சகோதரி B.K. மீனா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். மேலும் இராஜயோக தியானம் பயின்று வரும் தம்பதியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதனை சென்னை மூத்த சகோதரி B.K.தேவி அவர்கள் நடத்தி வைத்தார்கள்.