Sat. Jul 12th, 2025

News

பிரம்மா குமாரிகள் ஏற்பாடு செய்திருந்த சாந்தி காரியகர்மம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில் இன்று உலக அமைதிக்காவும் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் அமைதி பேரணி…

பட்டுக்கோட்டையில் ராஜயோக கண்காட்சி

  பட்டுக்கோட்டை அதிராம்பட்டினத்தில் சந்தன மாரியம்மன் கோவில் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை பிரம்மா குமாரிகள் அமைப்பின்…

அன்னையர் தின விழா

கரூர் மாவட்டம் அருகேயுள்ள மகாதானபுரம் கிராமத்தில் (ஊராட்சி) அன்னையர் தின நிகழ்ச்சி 8.5.2022 அன்று நடைபெற்றது. சுய உதவிக் குழு…

கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு மன அழுத்த மேலாண்மை வகுப்பு

கடலோர காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு ரத்தன் பஜார் பிரம்மா குமாரிகள் சார்பாக மன அழுத்த மேலாண்மையைப் பற்றி கடலோர காவல்படை…

அன்னையர் தின நிகழ்ச்சி

அம்பத்தூர் சென்னை அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னை அம்பத்தூரில் பிரம்மா குமாரிகள் சார்பாக அன்னையர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னையர்…

ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் தொழிலாளர் தின நிகழ்ச்சி

ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரம்மா குமாரிகள் சார்பில் 1.5.2022 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிலாளர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சியில்…

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 21.06.2022 அன்று சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது.  நிகழ்ச்சியின் கருப்பொருள் “சர்வதேச யோகா தினத்தில் யோகா மூலம் விவசாய செழிப்பு”  ஆகும். சிறப்பு விருந்தினர்களாக Er.S.சேகர்-MLA,பரமத்தி வேலூர், திரு.G.பிரபாகரன் பி.ஏ., பி.எல். நீதிபதி, பரமத்தி, திரு.S.கண்ணன் RDO, பரமத்தி வேலூர், திரு.R.ராஜேந்திரன், தலைவர், “ஆவின்” சேலம், திரு.S.கோவிந்தசாமி, உதவியாளர், வேளாண்மைத் துறை இயக்குநர், பரமத்தி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கரூர் மாவட்டம் & பரமத்தி வேலூர் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் பொறுப்பு சகோதரி BK சாரதா விவசாயிகளிடையே “யோகத்தின் மூலம் விவசாயம்” என்ற தலைப்பில் பேசினார்.

நாம் கற்றுக் கொள்ளும் யோகா வீட்டிற்கு வந்ததும் மறந்து போகும் வாய்ப்பு உள்ளது. எனவே, கண்டிப்பாக தினமும் தொடர்ந்து செய்ய முயற்சி செய்ய வேண்டும், நானும் 8-9 வருடங்களுக்கு முன்பு மவுண்ட் அபுவிற்கு சென்றிருந்தேன். அந்த நாட்களில் என் வாழ்வில் மறக்க முடியாத அமைதியை நான் மனதில் அனுபவம் செய்தேன் என்று Er.S.சேகர்-MLA,பரமத்தி வேலூர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். பரமத்தி வேலூர் சென்டரின் பொறுப்பு சகோதரி BK அம்பிகா தியான வர்ணனையை வழங்கினார், பார்வையாளர்கள் இனிமையான அமைதி மற்றும் அற்புதமான அனுபவத்தை அனுபவம் செய்தனர். இதைத் தொடர்ந்து கலாச்சார நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.