கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் வேலண்டிபாலையம் voc scatting ground -ல் சர்வ தேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் விருந்தினர்களாக ஆர்த்தி தங்க மாளிகைகளின் நிறுவனர் திரு.நாகமாணிக்கம், KTVR மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் திரு. ஜகநாதன் தனது அன்றாட வாழ்க்கையில் நிகழ்கின்ற பலவிதமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு இராஜயோகப் பயிற்சி உதவுகின்றது என்பதைப் பற்றி விளக்கினார். யோகாப் பயிற்சியாளர் திருமதி.சுதா அவர்கள் பிரணாயாம் மற்றும் சூரிய நமஸ்காரம் செய்வித்தார். கோயம்புத்தூர் பொறுப்புச் சகோதரி B.K.இராஜேஸ்வரி, சகோதரி B.K.சுவர்னம் மற்றும் சகோதரி B.K.பவித்ரா ஆகியோர் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்கள். இதில் 340 பொதுமக்கள் பங்குபெற்றனர்.
சர்க்கரை இனப்பெருக்கத் தொழில் மையத்தில் நடத்தபட்ட நிகழ்சியில் 96 ஊழியர்கள் பங்குபெற்று பயனடைந்தனர். இதில் முக்கிய விருந்தினராக சர்க்கரை இனப்பெருக்க தொழில் மையத்தின் இயக்குநர் டாக்டர் திரு.பக்ஷிராம் அவர்கள் கலந்துக்கொண்டார். BSNL சேவை உறுப்பினர் B.K.கார்த்திகேயன் அவர்கள் யோகாசனம் செய்வித்தார். கோயம்புத்தூர் பொறுப்புச் சகோதரி B.K.இராஜேஸ்வரி நிகழ்ச்சிகளை வழங்கினார்.
police battalion:
ஜூன் 19 -ஆம் தேதி 4 -வது பிரிவு சிறப்பு காவலர்களுக்கு மனதை நிலையாக, ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக வைத்துகொள்வதற்காக இராஜயோக தியான பயிற்சி வழங்கப்பட்டது. சகோதரி B.K.சாந்தி, சகோதரர் B.K.வரதராஜ் பெருமாள் ஆகியோர் 250 பயிற்சி காவலர்களுக்கு இராஜயோக தியான பயிற்சி அளித்தார்கள். இதில் முக்கிய விருந்தினராக 4 -வது பிரிவு காவல்துரை இன்ஸ்பெக்டர் K.ரகு அவர்கள் கலந்துகொண்டார்.
Personality development: கோவை புதூர் ஆஷ்ரம் உயர் நிலை பள்ளியில் ஜூன் 16 -ம் தேதி அன்று சுமார் 200 -க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கோயம்புத்தூர் பொறுப்பு சகோதரி B.K.இராஜேஸ்வரி அவர்கள் ஆளுமை வளர்ச்சிகான இராஜயோக பயிற்சியினை வழங்கினார்கள். நல்லெண்ணங்கள் மற்றும் நற்குணங்களை வளர்த்து கொண்டால் ஆளுமை திறன் அதிகரிக்கும் என்று அறிவுறுத்தினார்.