சென்னை

ஜூன் 7 -ஆம் தேதி சென்னை சுங்குவாசத்திரம் Happy village retreat center -ல் தமிழகத்தின் வருடாந்திர கூட்டு தியானப் பயிற்சி Return Journey என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக மவுண்ட் அபுவிலிருந்து சகோதரர் B.K.ராஜு மற்றும் சூரத்திலிருந்து சகோதரி B.K.திருப்தி ஆகியோர் கலந்து கொண்டனர். மூத்த சகோதர சகோதரிகள் அனைவரும் குத்துவிளக்கு ஏற்றி கூட்டு தியானத்தை துவக்கினார்கள் 1000 -த்திற்கும் மேற்பட்டோர் கலந்து பயனடைந்தனர். இதனை தொடர்ந்து ஜூன் 14 -ம் தேதி நடைபெற்ற கூட்டு தியானத்தில் மவுண்ட்அபுவிலிருந்து மூத்த சகோதரி இராஐயோகினி B.K.கீதா மற்றும் சகோதரி இராஐயோகினி B.K.ஹித்தல் ஆகியோர் கலந்து கொண்டு தியான வகுப்புகளை நடத்தினார்கள். 900 -க்கும் மேற்ப்பட்ட சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர்.
மூத்த சகோதரி B.K.பீனா தமிழகம் மற்றும் தென் கேரளத்தின் சேவை ஒருங்கிணைப்பாளர் இந்நிகழ்ச்சினை ஏற்பாடு செய்தார்கள்.
சென்னை அண்ணாநகர் பிரம்மாகுமாரிகள் சார்பாக கொலத்தூர் மோகன் கார்டனில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. இதில் 700 -க்கும் மேற்ப்பட்ட இராஜயோகம் பயின்று வரும் சகோதர சகோதரிகள் கலந்துக்கொண்டனர்.