மதுரை

நாகமலை சக்திபவனில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மெர்கண்டைல் Nationalised வங்கியின் பணியாளர்கள் 12 நபர்களுக்கு இராஜயோகப் பயிற்சி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாகமலை மக்கள் சங்கம் 27 நபர்களுக்கு ஓய்வில்லாத வாழ்க்கைகான எளிமையான யோகா முறை என்ற தலைப்பில் வகுப்புகள் நடைபெற்றது. மேலும் முத்துமாரியம்மன் மெட்ரிக் பள்ளியில் பள்ளிக்குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இராஜயோக The Healer என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் பள்ளியின் தாளாளர் திருமதி. பைரவி கலந்து கொண்டார்கள்.
Madurai mop making
மதுரை நாகமலை Mop Making Industry -யில் மூன்று நாட்களுக்கு அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு இராஜயோகா- The King of All Yogas என்ற தலைப்பில் இராஜயோகத் தியானப் பயிற்சி வழங்கப்பட்டது.
மதுரை மரவப்பட்டி கிராமத்தில் புலம் அவுட்ரிச் பணியகம் தகவல் மற்றும் ஒளிபரப்பு மையத்தின் சார்பாக யோகத்தைப் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பஞ்சாயத்து அலுவலர்களுக்கு இராஜயோக தியானப் பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் சித்தமருத்துவ துணை அதிகாரி டாக்டர். T.நளினி யோகா மற்றும் நேச்சுரபதியின் மருத்துவ அதிகாரி டாக்டர். R.பாமா மெகா யோகா மையத்தின் பயிற்சியாளர் திரு. T.கல்லுப்பட்டி மற்றும் திரு. C.R.மாணிக்கம் மதுரை துணை அலுவலர் திரு.P.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சினை இராஜயோகா ஆசிரியை சகோதரி B.K.ஆஷா ஏற்பாடு செய்தார்கள்.
மதுரை இந்திய அரசு பணியாளர்கள் வருங்கால வைப்புநிதி அமைப்பு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின்; Easy Yoga for Busy Life என்ற தலைப்பில் இராஜயோகா தியானப் பயிற்சி வழங்கப்பட்டது. மதுரை துணை மண்டல ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி சகோதரி B.K.உமா அவர்கள் நிகழ்ச்சிகளை வழங்கினார். 100 -க்கும் மேறப்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இதனைத் தொடர்ந்து காவலர் படைப்பிரிவு மைதானத்தில் இராஜயோகா தியான பயிற்சி வழங்கப்பட்டது. உயர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மதுரை விஷ்வ சாந்தி பவனில் ஜூன் 16 -ம் தேதி அன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 300 -க்கும் மேற்பட்ட தந்தையர்கள் கலந்துகொண்டனர். இதில் முக்கிய விருந்தினராக மதுரை துணை மண்டல ஒருங்கினைப்பாளர் சகோதரி B.K.உமா அவர்கள், Godly wood studio -வின் தமிழ் துறைத் தலைவர் இராஜயோகி B.K.ஜெயகுமார் அவர்கள் பண்புக் கல்வி இயக்குனர் டாக்டர். B.K.பாண்டியமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.