ஈரோடு

போதை ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு ஜூன் 26-ஆம் தேதி ஈரோடு பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் சார்பாக பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்ச்சி பேரணி கோபிச்செட்டிபாளையம் பேருந்துநிலையத்திலிருந்து தொடங்கி முத்து மஹாலில் நிறைவடைந்தது. ஈரோடு மாவட்ட நீதிபதி திரு.கணேசன், DSP இராதாகிருஷ்ணன், அரசு மருத்துவமனையின் அலுவலர் திரு.ஆனந்தன் ஆகியோர் பேரணியை துவக்கிவைத்தார்கள்.