சென்னை

சென்னை :
சென்னை பிம்மாகுமாரிகள் அடையார் கிளை நிலையத்தின் சார்பாக ஜூலை 8 -ஆம் தேதி திருவான்மியூரில் மக்களின் சேவைக்கென சொந்த இல்லமான திரிமூர்த்தி பவனின் திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மூத்த சகோதரி இராஜயோகினி B.K.கலாவதி, இராஜயோகினி B.K.பீனா மற்றும் அடையாறு கிளை நிலைய பொறுப்பு சகோதரி B.K.முத்துமணி ஆகியோர் நிகழ்சியை நடத்தினார்கள். மேலும் அசோக் நகர் கிளை நிலைய பொறுப்பு சகோதரி B.K.தேவி முகப்பேர் கிளை நிலைய பொறுப்பு சகோதரி B.K.தேவூரம்மா மற்றும் மூத்த சமர்ப்பண சகோதரர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். அநேக சகோதர, சகோதரிகள் இப்புதிய இல்லத்தில் தன்னுடைய ஆசிர்வாதங்களை கொடுத்தார்கள்.