சென்னை

சென்னை நுங்கம்பாக்கம் பிரம்மாகுமாரிகள் ஆழ்வாரபேட்டை கீதாபாடசாலையில் ஜுன் 30-திலிருந்து 7 நாட்களுக்கு உலகம் முழுவதும் மழை மற்றும் தண்ணீர் வளத்தை அதிகரிப்பதற்காக சிறப்பு தியானம் செய்யப்பட்டது. இராஜயோகம் பயின்று வரும் சகோதர சகோதரிகள் அதிகாலையில் கிணற்றடியை சுற்றி அமர்ந்து 7 நாட்களும் வெவ்வேறு அலங்காரங்கள் செய்து தியானம் செய்தனர். கிணற்றின் மேல் விளக்கினை ஏற்றி வைத்திருந்தனர். மூன்றாவது நாள் சிறப்பு தியானத்தில் நுங்கம்பாக்கம் பொறுப்பு சகோதரி B.K.சித்ரா கலந்து கொண்டார்கள். சகோதரர் B.K.செந்தில்வேலன் தினமும் எவ்வாறு இயற்கைக்கு நல்ல எண்ணங்களின் அதிர்வலைகளை பரப்பவேண்டும் என்ற தியான கமென்டரியை வழங்கினார். அதிசயமாக 7 வது நாள் மழை வந்ததாக குறிப்பிடப்படுகிறது.