மதுரை

ஜுலை 10 -ஆம் தேதி மதுரை சம்மந்தமூர்த்தி கிளை நிலைய பிரம்மாகுமாரிகள் சார்பாக Meenakshi மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு தியானத்தின் சக்தி என்ற தலைப்பில் 3 நாட்களுக்கு வகுப்புகள் நடைபெற்றது.
ஜுலை 11 -ஆம் தேதி மதுரை சம்மந்தமூர்த்தி விளம்பர சத்திரத்தில் பணிபுரியும் பணி;யாளர்களுக்கு சுய மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது. இதில் விளம்பர சத்திரம் மீடியா நிறுவனத்தின் இயக்குனர் திரு.ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டார்.
ஜுலை 12 -ஆம் தேதி மதுரை கல்லூரியில் Voice of Success என்ற தலைப்பில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பும் ராஜயோகா தியான பயிற்சி சகோதரி B.K.அமிர்தா மற்றும் B.K.ராம்குமார் சகோதரர் அவர்களால் அளிக்கப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
ஜுலை 13 -ஆம் தேதி பூர்னிமா மருத்துவமனையின் விநியோஹஸ்தர்களுக்கு ராஐயோகத்தினை பற்றியும் தியான பயி;ற்சியும் B.K.சரஸ்வதி சகோதரி அவர்களால் அளிக்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட அலுவலக பணியாளர்கள் பலனடைந்தனர்.