அபுரோடு தபோவன்

அபுரோட்டில் உள்ள தபோவனில் அலைகடலென திரண்டு வந்த வெள்ளை உடை அணிந்த சகோதரிகள் மரகன்றுகளை நட்டு இயற்கையை பாதுகாப்பதற்கான செய்தி கொடுத்தார்கள். சாந்திவனத்தில் இருந்து வந்திருந்த சகோதரிகள் சுட்டெரிக்கும் வெயிலிலும் மரகன்றுகளை நட்டார்கள். இதில் பல்வேறு வகையான மாமர கன்றுகள் நடப்பட்டது.
மரம் இருந்தால்தான் வாழ்க்கை இருக்கும் ஏனென்றால், மரத்தின் மூலமாகதான் ஆக்சிஜன் மற்றும் மழை கிடைக்கின்றது என்று கூறினார்கள். மும்பையிலிருந்து வந்த Software Engr.மோனிக்கா மற்றும் ரித்திகா ஆகியோர் இதில் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். இந்நிகழ்சியில் தமிழ்நாட்டு சகோதரர்களும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தார்கள்.