ஜார்கண்ட்

ஜார்கண்ட் மாநில நிலம்பர் பிடம்பர் பல்கலைகழகத்திற்கும் இராஜயோகக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் கல்வித்துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது. அந்த ஒப்பந்தத்தில் நிலம்பர் பிடம்பர் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் Dr.சத்யேந்தர நாராயன் சிங் அவர்களும் மதுவனத்தின் பண்புக்கலை கல்வி இயக்குனர் Dr.B.K.பாண்டியமணி அவர்களும் கையெழுத்திட்டனர். அப்போது, பல்கலைக்கழக பதிவாளர் Dr.ராகேஸ் குமார், கட்டாக் பண்புகலை கல்வி துறையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சகோதரி B.K.லீனா, கும்ளா நிலைய பொறுப்புச் சகோதரி B.K.சாந்தி ஆகியோர் உடனிருந்தார்கள். இராஜயோகக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் கல்வித்துறை PG Diploma in Yoga & Value Educationமற்றும்Certificate Course in Living Values ஆகிய பாடத்திட்டங்களை வழங்க ஓப்புதல் அளித்தது.