மதுரை

ஜுலை 26-ம் தேதி மதுரை சம்பந்தமூர்த்தி கிளை நிலையத்தின் மூலமாக ஸ்ரீ மதுரை மீனாட்சி மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஒருமுகப்படுத்தும் சக்தி என்ற தலைப்பில் வகுப்புகள் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
ஜுலை 26-ம் தேதி மதுரை வைகை ஆற்றில் அகில பாரத சன்யாசிகள் மாநாடு தொடாச்சியாக 15 நாட்கள் நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக சென்னை சிவசபா அகில பாரத சன்யாசிகள் ஒருங்கினைப்பாளர் அன்னை ஞானேஸ்வரி அவர்கள் கலந்துகொண்டார்கள். இவ்விழாவில் இராஜயோகா ஆசிரியை சகோதரி B.K.செந்தாமரை அவர்கள் ஆன்மீக சொற்பொழிவு வழங்கினார்கள். இதில் 500 -க்கும் மேற்பட்ட சன்மார்க துறவிகள், சிவனடியார்கள், பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
ஜூலை 17 ஆம் தேதி மதுரை நாகமலை அருள் ஆனந்தம்மாள் கல்லூரியில் கோல்டன் ஜுப்லி விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாணவர்களுக்கு தியான பயிற்சி வழங்க பிரம்மாகுமாரி சகோதரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். தியானப் பயிற்சியினை கருமதூர் கீதா பாடசாலை பிரம்மாகுமாரிகள் ஏற்பாடு செய்தனர். இராஜயோகா ஆசிரியர் சகோதரி B.K.அமிர்தலெட்சுமி தியான அனுபவத்தையும், சொற்பொழிவையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 1150 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர். கல்லூரி தாளாளர் அருட்தந்தை. Dr.அன்பரசு சிறப்புரையாற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.