உடுமலைபேட்டை

உடுமலைபேட்டை நகராட்சிக்கு உட்பட்ட அரசு நகராட்சி பள்ளிகளில் தியானம் மற்றும் நற்பண்புகளின் விழிப்புணர்வு மற்றும் இராஜயோக பயிற்சிகளை அளித்தனர்.இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ வெங்கட்டகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் (02.07.19) சுமார் 100 மாணவர்களும்இ சத்யம் கோச்சிங் சென்டரில் (06.07.19) சுமார் 50 மாணவர்களும்இ 5-வது வார்டு நகராட்சி துவக்கப் பள்ளியில்(08.07.19) சுமார் 20 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும்இ நகராட்சி நடுநிலைப் பள்ளியில்(10.07.19) சுமார் 25 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும்இ நெல்லுக்கடை வீதிஇ நடுநிலைப் பள்ளியில்(11.07.19) சுமார் 20 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும்இ கண்ணமநாயக்கனூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் (26.07.19) சுமார் 10 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உடுமலைபேட்டை பொறுப்பு சகோதரி பி.கு.மீனா மற்றும் சகோதரி பி.கு.ராதிகா அவர்கள் செய்திருந்தனர்.
மேலும் ஜீவா நகர்இ அங்கன்வாடி பணியாளர்கள் பயிற்சி முகாமில்(28.07.19)சுமார் 40 அங்கன்வாடி பணியாளர்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் பற்றியும் மற்றும் இராஜயோக பயிற்சியும் உடுமலைபேட்டை பொறுப்பு சகோதரி பி.கு.மீனா மற்றும் சகோதரி பி.கு.ராதிகா அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை உடுமலைபேட்டை திருமதி.வீணா குழந்தைகள் ஒருங்கிணைப்பு அதிகாரி அவர்கள் செய்திருந்தனர்.