Valsad – Gujarat

ஆகஸ்ட் 5 -ம் தேதி குஜராத் மாநில வல்சாட் (Valsad) நகர BKM அறிவியல் கல்லூரியில் NSS மாணவர்களுக்கு Cleanliness என்ற தலைப்பில் மூத்த இராஜயோகி சகோதரர் B.K.ரோகித் அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மனம், புத்தியை சுத்தமாக வைத்து கொள்வதன் விளைவாக நம்முடைய உடல், வீடு, தெரு, கிராமம், நகரம் மற்றும் நாட்டினை சுத்தமாக வைத்துக் கொள்ள இயலும் என்று கூறினார்.
மனதை எவ்வாறு சுத்தமாக வைத்துக்கொள்வது மேலும் தூய்மை மற்றும் நேர்மறையான எண்ணங்களால் அதை எவ்வாறு நிரப்புவது என்பதைப்பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் சுமார் 150 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தார்கள்.