Virginia USA

ஆகஸ்ட் 5 -ஆம் தேதி பிரம்மாகுமாரிகள் இயக்க நிர்வாகச் செயலாளர் மூத்த சகோதரர் Dr.B.K.மிருத்யுஞ்சய், பெங்களூர் ஜெயநகர் பிரம்மாகுமாரிகள் இயக்க பொறுப்புச் சகோதரி B.K.நாகர்தனா, USA விரிஜினியாவை சேர்ந்த சகோதரர் B.K.பவன்பீட்டர் ஆகியோர் அமெரிக்க நாட்டு விர்ஜினியா மாநில பிரதமர் மாண்புமிகு. Ralph Northam அவர்களுக்கு ராக்கி அணிவித்து இறைநினைவு பரிசு வழங்கினார்கள். அப்போது பிரம்மாகுமாரிகள் உலகம் முழுவதும் செய்துவரும் சேவைகளைப் பற்றி பகிர்ந்துகொண்டார்கள். இதனைத் தொடர்ந்து அதே மாநில முக்கிய பிரதிநிதியான திரு.Jerorauld Jay Jones அவர்களை சந்தித்து ராக்கி அனிவித்தனர். மேலும் அவர்களை பிரம்மாகுமாரிகளின் தலைமையகமான மவுண்ட்அபு வருவதற்கு அன்பான அழைப்பையும் விடுத்தார்கள்.