சோலாப்பூர் – மஹாராஷ்ட்ரா

மராட்டிய மாநில சோலப்பூர் நகர National Research Centre -ல் தேசிய கிராமிய வளர்ச்சி விவசாய (வேளாண்மை) மாநாடு பத்மபூன் Dr.விஜய் பாத்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மராட்டிய அரசின் கூட்டுறவு, மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் மாண்புமிகு.சுபாஷ் தேஷ்முக் அவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இதில் சர்வதேச அளவில் இருந்து முக்கிய விருந்தினர்களாக 70 பேர் அழைக்கப் பட்டிருந்தனர். Organic முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இதில் பிரம்மாகுமாரிகள் அமைப்பைச் சேர்ந்த B.K.தஷ்ரத், B.K.விட்டல், B.K.பாலாஸாஹேப், B.K.பாலு, மற்றும் B.K.துளசி ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஒவ்வொரு விவசாயியும் இராஜயோகப் பயிற்சி செய்ய ஆரம்பித்தால் பாரதம் மீண்டும் பொன்னுலகமாக மாறிவிடும் என்று Dr.பாத்கர் அவர்கள் கூறினார்கள். சர்வதேச அளவிலான வேளாண்துறை விஞ்ஞானிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது கருத்துகளை முன்வைத்தார்கள்.