மதுரை

மதுரை செந்தமிழ் கல்லூரியில் ஆகஸ்ட் 12-ஆம் தேதியிலிருந்து இரண்டு நாட்கள் இராஜயோக வகுப்புகள் நடைபெற்றது. மாணவர்களுக்கு இராஜயோகத்தைப் பற்றியும் மனஅமைதியைப் பற்றியும் பி.கு. சரஸ்வதி அவர்கள் வகுப்புகள் வழங்கினார்கள். இதில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடைந்தார்கள்.
மதுரை சம்மந்தமூர்த்தி பிரம்மாகுமாரிகள் மதுரை வைகையாற்றில் ஆகஸ்ட் 26 -ஆம் தேதி நடைபெற்ற வைகை பெருவிழாவை முன்னிட்டு 17 நாட்கள் தொடர்ச்சியாக படவிளக்கக் கண்காட்சி நடத்தினார்கள். 500 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதன்மூலம் பயனடைந்தார்கள். அந்நாட்களில் சகோதரி B.K.மிர்தா அவர்கள் படவிளக்கங்களை வழங்கினார். B.K.சரஸ்வதி அவர்கள் சொற்பொழிவு வழங்கினார்.
ஆகஸ்ட் மாதம் 04-ஆம் தேதி மதுரை சம்மந்தமூர்த்தி பிரம்மாகுமாரிகள் சிம்மக்கல் பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்கள் விளக்கு பூஜை நடத்தினார்கள். மதுரை சம்மந்தமூர்த்தி மைய சகோதரிகள் B.K.சங்கிதா மற்றும் B.K.கிருஷ்ணவேனி ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சியினை நடத்தினார்கள். இவ்விளக்கு பூஜையில் சுமாH 1000 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி ஜெய்ஹிந்தபுரம் வெக்காளி அம்மன் கோவிலில் நடைபெற்ற விளக்கு பூஜையில் சுமார் 50 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.