சென்னை

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை சுங்குவார்சத்திரம் Happy Village Retreat Center -ல் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் சகோதர, சகோதரிகள் இரக்.ஷா பந்தன் மற்றும் சுதந்திர தின விழாவை மிக சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த விழாவில் 1500 -க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். முக்கிய விருந்தினர்களாக மூத்த சகோதரி இராஜயோகினி B.K.கலாவதி, சென்னை மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி B.K.பீனா, மூத்த இராஜயோக ஆசிரியை B.K.முத்துமணி, B.K.தேவி மற்றும் பல சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.
தமிழக முதலமைச்சர் குடியிருப்பு மற்றும் செயலக அலுவலகத்திற்கு சென்று பிரம்மாகுமாரி சகோதரிகள் ராக்கி அணிவித்தனர். முதலமைச்சர் மாண்புமிகு.எடபாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் மாண்புமிகு. ஓ.பன்னீர்செல்வம் வருவாய் அமைச்சர் திரு. R.B.உதயக்குமார், பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இராஜேந்திர பாலாஜி துணை காவல் துறை அதிகாரிகள் திரு.சாய் சரன், திரு.முத்துசுவாமி IPS> திருமதி.விஜயகுமாரி, செய்தித் துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு ஆகியோருக்கு சென்னை மூத்த இராஜயோக ஆசிரியர்கள் சகோதரி B.K.சரோஜா, சகோதரி B.K.ஜான்சிராணி, சகோதரி B.K.பார்வதி, சகோதரர் B.K.சிவக்குமார், மற்றும் பல B.K சகோதரர்கள் இணைந்து அனைவருக்கும் ராக்கி அணிவித்து இறைநினைவு பரிசு வழங்கினர்.
ஆகஸ்ட் 18 ஆம் தேதி சென்னை ரத்தன் பஜார் தியான மையத்தில் இரக்.ஷா பந்தன விழா கொண்டாடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற பொது வழக்கறிஞர் திரு.விஜய நாராயணன், சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகள் மான்புமிகு திருமதி. V.பவானி, மான்புமிகு Rmt.தீகா ராமன் ஆகியோருக்கு சென்னை ரத்தன் பஜார் பொறுப்பு சகோதரி B.K.கீதா இராக்கி அணிவித்து இறை நினைவு பரிசு வழங்கினார்.