மலேசியா

மலேசியாவில் இந்தியர்கள் தமது பாரம்பரிய பண்டிகையான இரக்.ஷா பந்தன் விழாவை சிறப்பாக கொண்டாடினர். மலேசிய பிரம்மாகுமாரிகளின் இயக்குநர் B.K.மீரா அவர்கள் இந்திய உயர் காவல்துறை அதிகாரி மிருத்துல்குமார், மொரீஷியஸ் நாட்டு உயர் காவல்துறை அதிகாரி படேல் மற்றும் கெம்ராஜ் சிங் ஆகியோருக்கு இராக்கி அணிவித்து வாழ்த்துக்களை கூறினார். ஆசியா ரிட்ரீட் சென்டரில் பெங்களுர் VV புரம் துணை மண்டல பொறுப்புச் சகோதரி B.K.அம்பிகா அவர்கள் அனைவருக்கும் இராக்கி அணிவித்து இரக்.ஷா பந்தனத்தைப் பற்றிய ஆன்மீக செய்தியினை வழங்கினார்.