டெல்லி – ORC

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ௐசாந்தி ரிட்ரிட் சென்டர் வளாகம் மிக கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டது. அழகிய மற்றும் தத்ரூப கண்காட்சிகள் மூலம் முழு வளாகமும் கிருஷ்ணபுரியாக மாறியிருந்தது. குழந்தை கிருஷ்ணரின் லீலைகளை காண்பதற்கு ஆயிரக்கணக்கானோர் வெகு தொலைவிலிருந்து வந்து கூடியிருந்தனர். அங்கு கிருஷ்ணருடைய வரலாற்றை சித்தரிக்கும் சத்யபாமா ருக்மணி, வெண்நெய் திருட்டு, அருச்சுனருக்கு ஸ்ரீகிருஷ்ண உபதேசம் குசேலருடன் சந்திப்பு, கோவர்தன மலை, சிங்கத்தின் குகை, புஷ்பவிமானம், அதீந்திரிய சுக ஊஞ்சல் ஆகியவை மிக தத்ரூபமாக அமைந்து அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டது.