லண்டன்

லண்டன் மாநகர லெஸ்டள் நகரில் உள்ள ஹார்மனி இல்லத்திலும் கிருஷ்ண ஜெயந்தி விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. குழந்தைகளிலிருந்து பெரியவர் வரை அனைவரும் ஹிந்தி திரைப்பட பாடல்களுக்கு கிருஷ்ண லீலைகளை கலை நயத்தோடு வழங்கினர். இந்நிகழச்சிக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் ஜெர்மெனி பிரம்மாகுமாரிகள் அமைப்பின் இயக்குநர் சகோதரி இராஜயோகினி பிகே.சுதேஷ் அவர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது கிருஷ்ண ஜெயந்தியை குறித்த பல ஆன்மீக இரகசியங்களை விளக்கி அனைவருக்கும் குதுகலமூட்டினார்.