நவிமும்பை கன்சோலி நகர்

நவிமும்பை கன்சோலி நகர் ஸ்ரீ முகாம்பிகை கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சைத்தன்ய தேவிகளின் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கண்காட்சியை கோவில் அறங்காவலர்கள் சகோதரர் அன்னி ஷெட்டி, சகோதரர் சுரேஷ் கோட்டியான் மற்றும் சேவை மைய பொறுப்பாளர் சகோதரி பிகே. ஷீலா ஆகியோர் திறந்து வைத்தார்கள். மேலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் மேற்கண்ட விருந்தினர்களோடு சகோதரி பிகே.சுபாங்கி, சகோதரி பிகே.மீரா, சகோதரி பிகே.பிரீத்தி ஆகியோரும் பங்கேற்றனர். நவராத்திரி விழாவின் ஆன்மீக ரகசியத்தை பிகே. ஷீலா அவர்கள் அனைவருக்கும் எடுத்துரைத்தார். சைத்தன்ய தேவிகளின் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேவிகளுக்கு ஆரத்தி எடுத்தும், கர்பா நடனம் ஆடியும், தாண்டியா நடனமாடியும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பக்தர்களுக்கு தெய்வீக செய்திகளும் வழங்கப்பட்டது.