மோஜ்பூர்- டெல்லி

மோஜ்பூர், டெல்லி : டெல்லி, மோஜ்பூரில் உள்ள தியான மையத்தில் நவராத்திரியை முன்னிட்டு மனதைக் கவரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் கூடவே இருபது வருடங்களுக்கு மேற்பட்ட தம்பதியர்களை பெருமைப்படுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் தங்களது திறமைகளை கலைநிகழ்ச்சிகள் மூலமாக வெளிப்படுத்தி அனைவரையும் மகிழ்வித்தனர். இந்நிகழ்ச்சியில் சேவை மைய முக்கிய இயக்குனர் சகோதரி பிகே.மணி அவர்களோடு சகோதரி பிகே.ஹேனா, பல்ராம் நகர தொழிலதிபர் ராகுல் அரோரா மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.