உத்ரகாண்ட்

பிரம்மாகுமாரிகளின் மருத்தவ பிரிவு உத்ரகாண்ட் மாநிலத்தில் “எனது உத்ரகாண்ட் போதையில்லா உத்ரகாண்ட்” என்ற 25 நாள் பிரசாரம் மாநிலம் முழுவதும் நடத்த திட்டமிட்டு அதன் தொடக்கவிழா முக்கிய தியான மையமான சுபாஷ் நகரிலிருந்து தொடங்கப்பட்டது. அதன் தொடக்க விழாவில் மதுவனத்தின் மருத்துவபிரிவு செயலாளர் டாக்டர் பிகே.பனாரசிலால் அவர்கள் பேசும் போது மன அழுத்தமே போதை பழக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் இராஜயோக தியானத்தின் மூலமாக அதிலிருந்து எளிதில் விடுபடமுடியும் என்றும் கூறினார். இந்நிகழ்ச்சியில் Chardham மேம்பாட்டு கவுன்சிலின் துணை தலைவர் Acharya Shiv Prasad, சட்ட ஒழுங்கு ADGP அசோக்குமார், IMA தலைவர் டாக்டர். Sanjay kumar Goyal, மும்பையின் போதை ஒழிப்பு பிரச்சார இயக்குநர் பிகே.சச்சின் பரப், Indian book of record holder பிகே.டாக்டர்.சஞ்சய், பஞ்சாப் மண்டல மருத்துவ பிரிவு பொறுப்பாளர் டாக்டர் பிகே ராம்பிரகாஷ், டேராடூன் துணை மண்டல இயக்குநர் பிகே.மஞ்சு, உத்திரபிரதேச ஆரோக்கிய சேவையின் முன்னாள் தலைவர் டாக்டர் பிகே. ராம்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து முக்கிய விருந்தினர்களும் திருவிளக்கேற்றி நிழ்ச்சியை தொடக்கி வைத்தார்கள். 2. டெல்லி ORC ரீட்ரீட் சென்டரில் பத்து நாட்கள் அமைதி அனுபவ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பஹ்ரைன், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ORC இயக்குநர் பிகே.ஆஷா அவர்கள் ஆழ்ந்த அமைதியின் உண்மையான பொருளை விளக்கினார். சுமார் பத்து நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு விருந்தினர்கள் ஆழ்ந்த அமைதியினை அனுபவம் செய்தார்கள்.