செங்கல்பட்டு

செங்கல்பட்டில் சிவ ஜெயந்தி விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் இராஜம் மஹாலில் சோமநாத், காசி விஷ்வநாத், மற்றும் பஞ்சலிங்க தரிசனம் போன்ற கண்காட்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் திரு.பாலாஜி, அகத்திய கிருபா அன்பு செழியன் மற்றும் லயன் டி.கே.சன்முகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு திருவிளக்கினை ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதில் 5000 த்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். சிறப்பு நிகழ்ச்சியாக தேவிகளின் தத்ரூப காட்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.