ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை பிராட்வே பிரம்மா குமாரிகள் சார்பாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த மே மாதம், 31ஆம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பிராட்வே பிரம்மா குமாரிகள் சேவை நிலைய பொறுப்பாளர் B.K கீதா முன்னிலையில், B.K பிரபா மற்றும் B.K பிரியா ஆகியோர் பொறுப்பேற்று நிகழ்ச்சியை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, திரு. சத்தியசீலன் ஸ்டேஷன் மாஸ்டர், சென்ட்ரல் ரயில் நிலையம், திரு.யோகநாதன். எஸ்.ஆர். ASIPF RPF, திருமதி.சசிகலா GRP இன்ஸ்பெக்டர், மத்திய ரயில் நிலையம், Dr. பெருமாள் தலைமை மருத்துவ இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் பொதுமக்களுக்கு படவிளக்கக் கண்காட்சியின் மூலமும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.