இந்தோனேசியா

இந்தோனேசியாவில் ஈஸ்வரிய சேவைகளை விரிவுபடுத்துவதற்க்காக பாலியில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமான ஜான்யாரில் புதிய தியான நிலையம் திறக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். நியூசிலாந்தின் மூத்த இராஜ யோக ஆசிரியை பிகே பாவனாவும் கலந்து கொண்டார். அப்போது அனைத்து விருந்தினர்கள் மற்றும் அனைத்து பிரம்மாகுமார் குமாரி சகோதர. சகோதரிகளுக்கும் இந்தோனேசிய கலாச்சாரப்படி வரவேற்பு வழங்கப்பட்டது. கிழக்கு பாலியில் உள்ள இப்புதிய கட்டிடம் கொடியேற்றியும், ரிப்பன் வெட்டியும் திறக்கப்பட்டது. அப்போது உள்ளுர் உறுப்பினர்கள், பல கலை நிகழ்ச்சிகளை வழங்கி அனைவரையும் உற்சாகப்படுத்தினர். மகிழ்ச்சியான இத் தருணத்தில் பிகே பாவனா உட்பட, பிகே பிரீக், பிகே.இடா, பிகே. ஓகா, பிகே. சுகார்ஷா, பிகே. மோனா மற்றும் நகரத்தின் முக்கிய அதிகாரிகள் பலர் கேக் வெட்டி அனைவருக்கும் நல்லாசிகளை வழங்கினர்கள்;.